Tamil Movie Ads News and Videos Portal

உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு!

உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவுபகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக இப்படம் தயாராகி வருகிறது.

கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘வத்திக்குச்சி’ திலீபன், ’கைதி’ ஜார்ஜ் மரியான், ’வடசென்னை’ பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

#VijayKumar #விஜய்குமார்