Tamil Movie Ads News and Videos Portal

பட்டாசு தொழிலார்களுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அவர்களின் துயர் துடைக்க பல தன்னார்வலர்கள் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் விஜய் ரசிகர்களும் தங்களால் முயன்ற நிதியுதவியும் , அத்யாவசிய பொருட்களும் அவதிப்படும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதியதலைமுறை செய்தி மூலம் சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வசிக்கும் பசியால் வாடும் ஏழை பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவி தேவைபடுவதை அறிந்து 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் விருதுநகர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் மாரிசெல்வம் வழங்கினார்.

அசத்துங்க நண்பாஸ்