Tamil Movie Ads News and Videos Portal

தமிழில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் படம்

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக மாறியவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அடுத்து வெளியான ‘கீதா கோவிந்தம்’ படமும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரின் மார்க்கெட் தமிழ்ப்படங்களிலும் உயர்ந்தது. தமிழில் நேரடியாக அவர் நாயகனாக நடித்த ‘நோட்டா’ திரைப்படமும், இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் அவர் நாயகனாக நடித்த ‘டியர் காம்ரேட்’ திரைப்படமும் வெற்றிபெறவில்லை.

தற்போது மீண்டும் தெலுங்கில் அவர் “வேர்ல்ட் பேமஸ் லவ்வர்” என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் ராஷிக் கண்ணா, கேத்ரின் தெரசா, ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல்லா லத்தீப் என்று நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தைப் போன்று காதல் ரொமொண்டிக் த்ரில்லர் வகையில் இப்படம் உருவாகி இருப்பதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வரும் பிப்ரவரி 14ல் வெளியாகவிருக்கிறது.