Tamil Movie Ads News and Videos Portal

விஜய் தேவரகொண்டா பெயர் செய்த லீலை

- Advertisement -

தெலுங்கு படவுலகில் கிடுகிடுவென உச்சம் தொட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்து பெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் இவருக்கு ரசிகைகள் கூட்டம் எக்கச்சக்கமாகியது. இப்பொழுது அதுவே அவருக்கு பெரும் தலைவலியாக ஆகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் இவரின் நண்பர் ஒருவர் ‘விஜய் தேவரகொண்டா’ பெயரைப் பயன்படுத்தி சமூக வலைதளப்பக்கம் ஒன்றைத் தொடங்கி அதில் பெண்களிடம் தவறான முறையில் ஒரு மர்மநபர் பேசி வருவதாக தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய் தேவரகொண்டா அந்த நண்பரையே பெண் போல அந்த மர்மநபரிடம் பேச வைத்து, அதற்கு அந்த நபர் மறுபதிவிட்ட ஆபாசமான வார்த்தைகளை ஸ்கேன் செய்து ஆதாரமாக எடுத்துக் கொண்டு போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அதே பாணியில் அந்த மர்மநபரிடம் பேசிய போலீஸ், அவரை ஹைதராபாத் நகருக்கு வரச் சொல்லி வசமாக வலையில் சிக்க வைத்திருக்கிறது. தன்னுடைய பிரபல பிம்பமே தனக்கு பிரச்சனையாகி வருவதை எண்ணி நொந்து போய் இருக்கிறாராம் விஜய் தேவரகொண்டா.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.