மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் ஜான்வி கபூர். இவர் எந்தத் திரைப்படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கின்ற எதிர்பார்ப்பு நிலவிய காலகட்டம் இந்தியத் திரையுலகில் இருந்தது. இவர் தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாகவிருக்கிறார். “பைட்டர்” எனப் பெயர்
சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜான்வி கபூருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கிறார். இது குறித்து ஜான்வி கபூர் கூறும் போது, “பைட்டர் படத்தின் வாயிலாக தென்னிந்திய மொழிகளில் கால் பதிப்பது சந்தோஷம் அளிக்கிறது. அதுவும் எனக்கு விஜய் தேவரகொண்டா மீது ஆல் டைம் கிரஷ் உண்டு. முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடிப்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது..” என்று தெரிவித்திருக்கிறார்.