இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த திரைப்படம் “நானும் ரவுடிதான்”. இப்படத்தினைத் தொடர்ந்து மற்றொரு படத்தில் இதே கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. அந்தத் தகவல் இப்பொழுது உண்மையாகி இருக்கிறது.
நேற்று காதலர் தினத்தினை முன்னிட்டு, இந்த புதுப்படம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மற்றொரு காதலி வேடத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாக தெரிகிறது. அனிருத் இசையமைக்கிறார். லலித்குமார் உடன் இணைந்து விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். படத்தின் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு விரைவில் தொடங்கவிருக்கிறது.