விக்னேஷ் சிவனின் “இரண்டு காதல்”
‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தனது இரண்டாவது படமான ‘நானும் ரவுடி தான்’ படத்தில் தனது காதலியான நயன்தாராவை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். ரொமாண்டிக் காமெடி வகைத் திரைப்படமாக வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இக்கூட்டணி தற்போது மீண்டும் இணைய இருக்கிறது.
இப்படத்திற்கு “இரண்டு காதல்” என்று பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கதைப்படி இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பெண்களை ஹீரோ விஜய் சேதுபதி வெவ்வேறு காலகட்டங்களில் காதலிப்பது போன்ற திரைக்கதை உருவாகியிருக்கிறதாம். இதில் ஒரு நாயகியாக நயனும் மற்றொரு நாயகியாக சமந்தாவும் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.