Tamil Movie Ads News and Videos Portal

“விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!

படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தற்போது அடுத்த அதிரடியாக இப்படத்தின் இரண்டு பாகங்களையும் Red Giant Movies சார்பில் உதயநிதி வழங்குகிறார் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. தொடர் வெற்றிப்படங்களின் பிராண்டாக மாறியிருக்கும் Red Giant Movies நிறுவனம் “விடுதலை” படத்தினை வெளியிடுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

விடுதலை பாகம் 1 & விடுதலை பாகம் 2 ஆகிய இரு படங்களையும் Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில், முதல் பாகத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

#Viduthalai #விடுதலை