திருச்செந்தூர் முருகனை தரிசித்த விக்கி நயன் ஜோடி
நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் நெற்றிக்கண் என்கின்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நயன் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் நயன் உட்பட படக்குழுவினர் அனைவருமே விரதம் இருந்து படப்பிடிப்பை நிறைவு செய்யப் போவதாக ஆர்.ஜே.பாலாஜி அறிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியது. ஆனால் அதில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அவர் எப்பொழுது படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று, முன்தினம் கன்னியாகுமரி மூக்குத்தி அம்மன் கோவிலில் விரதத்துடன் படப்பிடிப்பைத் தொடங்கினார் நயன்தாரா. நேற்று தன் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் உடன் இணைந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் சென்று இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.