காதலும் திரில்லரும் கலந்த பயணம் இந்த வேழம்
நாயகன் அசோக்செல்வன் ஒரு பயணத்தில் தன் காதலி ஐஸ்வர்யா மேனெனை இழக்கிறார். அந்த இழப்பிற்கு யாரெல்லாம் காரணமோ அவர்களை பழி தீர்க்க கிளம்புகிறார். அந்தப் பயணத்தில் அடுத்தடுத்து நிகழும் ஆச்சர்யங்கள் தான் வேழம் படத்தின் கதை
“எனக்கு என்ன கேரக்டர் வேணாலும் கொடுங்கப்பா..அதைச் சரியா செஞ்சிட்டுப் போய்ட்டே இருப்பேன்” என்ற கட்ஸோடு வலம் வருகிறார் அசோக்செல்வன். இந்தக் கதைக்கு அவ்வளவு நியாயம் கொடுத்து நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா மேனன் சிறந்த நடிப்பை கொடுக்க, ஜனனி ஐயரும் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளார். இந்தப்படத்தின் முதல் பலமே குறைந்த கேரக்டர்கள் என்பதும், அவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள் என்பதும் தான்
பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. ஒளிப்பதிவிலும் நல்ல நேர்த்தி வாய்த்திருக்கிறது
ஒரு சின்ன லைனை வைத்துக் கொண்டு திரைக்கதையில் அழகழகான திருப்பங்களை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். முன்பாதியில் இருந்த கச்சிதம் பின்பாதியில் கூடி வராவிட்டாலும் இந்த வேழம் ஓர் நல்ல அனுபவம்
-மு.ஜெகன் கவிராஜ்