கொடைக்கானல் பகுதியில் தாதா ராம்கியோடு அடியாளாக இருக்கும் ஆர்.கே சுரேஷின் அடிதடி ஆர்ப்பட்டமும்..கலகலகாதல் மற்றும் பேமிலி செண்டிமெண்டும் தான் வேட்டைநாய் படத்தின் கதை.
முன்பாதி ஆக்ரோஷத்திலும் சரி பின்பாதி செண்டிமெண்டிலும் சரி..விட்டுக்கொடுக்காமல் நடித்து கவர்கிறார் நடிகர் ஆர்.கே சுரேஷ். பாலாவின் தாரை தப்பட்டைப் படத்திற்கு பிறகு அவர் தரமாக நடிப்பை வழங்கிய படமாக வேட்டைநாய் இருக்கிறது. நடிகர் ராம்கி வில்லன் கதாப்பாத்திரத்திற்கு தன்னை அப்படியே பொருத்திக் கொள்கிறார். மிக அழகாக சில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். நாயகி சுபிக்ஷா காதல் கணவனை திருத்தும் முயற்சியில் நன்றாக கவனிக்க வைக்கிறார். இதைப்போல் தொடர்ந்து கவனிக்கப்படும் படங்களில் நடித்து வந்தால் நிச்சயம் நல்ல இடத்தைப் பிடிப்பார். மேலும் படத்தில் நடித்த ஏனைய கேரக்டர்களும் நன்றாகவே நடித்துள்ளார்கள்.
கமர்சியல் கலந்த கதைகளிலும் டெக்னிக்கல் டிப்பார்ட்மெண்ட் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தப்படம் மாஸ் கமர்சியலாக மாறும். அந்த வகையில் படத்தின் சினிமாட்டோகிராபர், மியூசிஸ்சியன் உள்பட எல்லா டெக்னிஷியன்ஸும் சிறப்பாகவே உழைத்திருக்கிறார்கள்.
கத்தியை எடுப்பதை போலவே அதை வைத்துவிட முடியாது. அதேபோல் தீயவர்களோடு கூட்டு வைத்திருப்பவன் பின் நல்லவனாக மாறினாலும்.. மாறியபின்னும் அவனால் ஆறாத காயம் பெற்றவர்கள் திரும்பி வரத்தான் செய்வார்கள் என்ற நிதர்சனத்தைப் படம் பேசியிருப்பதால்..வேட்டைநாயை சிறுசிறு குறைகள் இருந்தாலும் மன்னித்து வரவேற்கலாம்!
-மு.ஜெகன்சேட்