Tamil Movie Ads News and Videos Portal

களை கட்டிய வேட்டை நாய் ஆடியோ லாஞ்ச்!

சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வேட்டை நாய்’ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சந்திரபபிரகாஷ் ஜெயின், அழகன் தமிழ்மணி, விடியல் ராஜு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார் பவித்ரன் நடிகர்கள் ஏ.எல்.உதயா, போஸ் வெங்கட் ,சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாகுவார் தங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.