Tamil Movie Ads News and Videos Portal

நெட்ப்ளிக்ஸில் வெளியான வெங்கட் பிரபுவின்“ஆர்.கே.நகர்”

தியேட்டர் அனுபவங்களை மிஞ்சும் அளவிற்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவை போட்டி போட்டுக் கொண்டு புது புது திரைப்படங்கள் மற்றும் வெஃப் சீரிஸை தயாரிப்பதோடு, தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களை வாங்கி வெளியிடவும் செய்கின்றன. சில திரைப்படங்கள் தியேட்டரில் ரீலிஷ் செய்யப்படாமல் நேரிடையாக இது போன்ற இணையதளங்களில் வெளியாகின்றன. அண்மையில் இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் அவரது உதவியாளர் சரவணக்குமார் இயக்கத்தில் வைபவ், சனா, சம்பத்குமார் நடிப்பில் “ஆர்.கே.நகர்” என்ற படம் உருவாகியிருந்தது. படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், படத்தின் வெளியீட்டுத் தேதி சிலமுறை அறிவிக்கப்பட்டும் கூட திரைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கணிசமான தொகைக்கு வாங்கி வெளியிட்டிருக்கிறது.