Tamil Movie Ads News and Videos Portal

வெந்து தணிந்தது காடு- விமர்சனம்

- Advertisement -

ஒரு சாதா தாதா ஆகும் கதை வெ.த.கா

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சியில் எளிய வேலை பார்த்து வரும் சிம்புவிற்கு மும்பை செல்ல வேண்டிய சூழல் வாய்க்கிறது. மும்பை வந்த சிம்பு எப்படி ஒரு தாதாவாக மாறுகிறார் என்பதும், தாதாவாக மாறி என்னென்ன செய்கிறார் என்பதும் தான் படத்தின் கதை

சிம்புவின் தனித்துவமே கொடுக்கும் கேரக்டருக்குள் சொடக்கு போடும் நேரத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்வது தான். இப்படத்திலும் தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்கிறார். அபாரம் சிம்பு. நாயகி சித்தி இதானிக்கு சிறிய வேலை தான். ராதிகா சரத்குமார் உள்பட பல நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும் யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லை

படத்தின் மற்றொரு ஹீரோ ஏ.ஆர் ரகுமான் தான். பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளரை கெளதம்மேனன் போல வேலை வாங்க யாராலும் முடியாது. இந்தப்படத்திலும் அது மிஸ் ஆகவில்லை. விஷுவல் அள்ளுகிறது

படத்தின் பெரிய சோதனை ஏரியாவே படத்தின் ஸ்லோ ப்ராசசஸ் தான். கெளதம் மேனன் ஏற்கெனவே லீட் கொடுத்திருந்தாலும் படத்தின் ஓட்டம் நம்மை லைட்டாக வாட்டமடையவே செய்கிறது. ஏற்கெனவே பார்த்துச் சலித்த கதையில் எவ்வளவு தான் புதுமை புகுத்தினாலும் அதில் பழமை வாடை அடிக்கவே செய்கிறது. ஆனாலும் கெளதம் ஸ்டைலில் இல்லாமல் புதுசாக இருக்கும் சிலபல காட்சிகள், சிம்புவின் அட்ராக்சன் என சில ப்ளஸ்கள் இருப்பதால் வெந்து தணிந்தது காட்டுக்கு ஒருமுறை விசிட் அடிக்கலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்

#VendhuThanindhathuKaadu #வெந்துதணிந்ததுகாடு

- Advertisement -