Tamil Movie Ads News and Videos Portal

வேலன்- விமர்சனம்

- Advertisement -

இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை எடுக்கிறோம் என்ற ஆர்வத்தில் புகுந்து ஆடியிருக்கிறார் இயக்குநர் கவின்

பிக்பாஸ் புகழ் முகேனுக்கு படிப்பு என்றால் கசப்பு..அப்பா என்றால் இனிப்பு மகன் மீது பாசம் வைத்திருக்கும் அப்பா பிரபுவிற்கோ மகன் மீது பெரும்பாசம் இருந்தாலும் மகன் படிப்பில் கோட்டை விட்டதில் வருத்தம். மேலும் கல்லூரி செல்லும் முகேன் அங்கு ஒரு காதல் வயப்பட அதிலும் ஒரு சிக்கல். அதனால் தந்தை பிரபுவிற்கும் ஒரு சிக்கல். ஆக தந்தையின் வருத்தத்தை காலி செய்து தான் நேசிக்கும் பெண்ணுக்கு எப்படி தாலி கட்டுகிறார் என்பதே வேலனின் விளையாட்டு! சூரிக்கு ஒரு தனி ட்ராக், ஹரிஷ் பேரொடிக்கு ஒரு தனி ட்ராக் என படத்தில் இன்னும் சில ட்ராக்குகள் உண்டு

அறிமுக நாயகன் முகேன் ப்ளசண்டாக இருக்கிறார். அவர்சன் இல்லாத காமெடி, காதல் எமோஷ்னல் எல்லாமே அவருக்கு வருகிறது. கதை தேர்வில் சிரத்தை எடுத்தால் நல்லா வருவார். நாயகி ஓகே ரகம். பிரபு அடக்கமாக வசீகரிக்கிறார். ஹரிஷ் பெரோடி கத்தாமல் சோதிக்க, தம்பி ராமையா கத்தி கத்தி சோதிக்கிறார். இடைவேளைக்குப் பிறகு நடிகர் சூரி பெரும் ஆறுதல் படுத்துகிறார்.

படத்தில் கேமரா மேன் புகுந்து விளையாண்டிருக்கிறார். நல்ல தொழில் நேர்த்தி. எடிட்டர் கத்தியை கவனமாக கையாண்டிருக்கலாம். பாடல்களும் பின்னணி இசையும் கமர்சியல் ரெயில்.குடும்பமாக தியேட்டருக்குச் சென்று சந்தோஷமாக பார்க்கக் கூடிய அளவிற்கு நல்ல லைன் இது. அதீத நம்பிக்கையில் சில லாஜிக் விசயங்களை கண்டுக்காமல் விட்டுட்டார்கள். இல்லை என்றால் இது நம்ம வீட்டு வேலனாக ஈர்த்திருப்பார்.

-மு.ஜெகன் கவிராஜ்

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.