இந்த உலகமே அன்பால் தான் இயங்குகிறது. அந்த அன்பை எந்த வயதிலும் எந்த வடிவத்திலும் அதிகப்படியாக வெளிப்படுத்தலாம். “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ” என்பது வள்ளுவர் வாக்கு. அப்படியான ஓர் அன்பைச் சொல்லி அப்ளாஸ் வாங்குகிறது வீட்ல விசேசம் படம்
ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் ஆர்.ஜே பாலாஜி அப்பள்ளியின் தாளாளர் அபர்ணா பாலமுரளியை காதலிக்கிறார். அந்தக் காதல் கை கூடினாலும், ஆர்.ஜே பாலாஜியின் வயதான அம்மா ஊர்வசி கர்ப்பம் ஆகிறார். அதனால் ஊர்வசி & சத்யராஜை சுற்றமும் நட்பும் ஒருமாதிரியாகப் பேச..ஆர்.ஜே பாலாஜிக்கு அது இரிட்டேட்டாக மாற.. வீட்டில் குழப்பம் வருகிறது. அந்தக் குழப்பம் எப்படி தீர்கிறது என்பதே வீட்ல விசேசம்
ஜாடிக்கேற்ற மூடி என்பது போல, ஆர்.ஜே பாலாஜிக்கு ஏற்ற கேரக்டர் என்பதால் ஜஸ்ட் லைக் தட் ஆக ஸ்கோர் செய்கிறார். எமோஷ்னல் காட்சிகளிலும் நல்ல நடிப்பு. அபர்ணா பாலமுரளி கொடுத்த வேலையைச் செவ்வனே செய்துள்ளார். ஆனால் இவர்களை எல்லாம் ஈசியாக கடந்து முதல் இடத்தில் வந்து நிற்கிறார்கள் சத்யராஜும், ஊர்வசியும். தங்கள் அனுபவங்கள் மூலமாக அவர்கள் காட்டும் ஜோடி பெர்பாமன்ஸ் மாஸ் மெட்டியரில். குறிப்பாக க்ளைமாக்ஸ் அருகில் வரும் காட்சி ஒன்றில் தியேட்டரை அல்லுசில்லாக்கி விடுகிறார்கள் இருவரும்
பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் கதைக்கு தேவையானதைச் செய்துள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவும் சரியாக அமைந்ததில் விஷுவலாகவும் படம் குவாலிட்டிக்கு கியாரண்டி தருகிறது
படத்தில் சிற்சில காட்சிகள் வெறும் வசனங்களாகவே கடந்து போவது மட்டும் மிகச்சிறு குறையாக தெரிகிறது. சேம்டைம் அந்த வசனங்கள் எல்லாமே மெச்சூட் ஆக இருப்பதால் அவற்றையும் ரசிக்க முடிகிறது. மனைவி மீது இந்த வயதிலும் இப்படி ஈர்ப்பு வச்சிருக்கணுமா? என்று கேட்டால், எந்த வயதிலும் வச்சிருக்கணும் என்று உரக்கச் சொல்வதால் நிச்சயமாக தியேட்டர் எங்கும் விசேசம் என்றளவில் இப்படத்தை கொண்டாடலாம்
-மு.ஜெகன் கவிராஜ்