சுசீந்திரன் படங்களில் எமோஷ்னல் எப்படியும் நம்மை ஈர்த்துவிடும். அந்த வகையில் வீரபாண்டியபுரம் படத்திலும் அடிதடி, ஆக்ஷன் இருந்தாலும் எமோஷ்னலும் தூக்கலாக இருக்கிறது. இரு கிராமங்களுக்கு இடையே உள்ள ஒரு பிரச்சனை…அங்கு ஒரு காதல், காதலைத் தாண்டிய ஓர் பழிவாங்கல் என இப்படத்தின் கதை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத வகையில் விரிகிறது
ஜெய் இந்தப்படத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு இந்த வீரபாண்டியபுரம் படத்தில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகி மீனாட்சியின் நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். சரத், ஜெயப்பிரகாஷ் இருவரும் முதிர்ச்சியான நடிப்பை வழங்க, பாலசரவணன் ஒருசில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நடிப்பு காளி வெங்கட்டின் நடிப்பு தான் .
படத்தின் திரைக்கதையில் இருக்கும் கணம் ஒளிப்பதிவிலும் இருப்பது பெரும்பலம்..பின்னணி இசையை நடிகர் ஜெய் தான் அமைத்திருக்கிறார். நல்ல முயற்சி.. இந்த வார விடுமுறைக்கு வீரபாண்டியபுரத்திற்கு தாரளமாக விசிட் அடிக்கலாம்