Tamil Movie Ads News and Videos Portal

வீரன்- விமர்சனம்

எக்ஸ்ட்ரா பவர் கொண்ட ஹீரோ ஊரைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதை

பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவனான ஹிப்ஹாப் ஆதியை தன்னைக் கிண்டல் செய்ததால் (2007-ஆம் ஆண்டு) கிராமத்துச் சிறு தெய்வமான வீரன் மின்னல் மூலமாக தண்டித்து விடுகிறார். தீவிர சிகிச்சையில் இருக்கும் ஆதியை அவரின் அக்கா சிங்கப்பூருக்குப் பார்சல் செய்கிறார். 2021-ல் மீண்டும் கிராமத்திற்கு திரும்புகிறார் ஆதி. அப்போது தான் தெரிகிறது மின்னல் தாக்குதல் மூலமாக ஹீரோவுக்கு வேறோர் பவர் கிடைத்துள்ளது. Same time ஊருக்குள் தனியார் டீம் ஒன்று கரன்ட் கேபிள் மூலமாக குடைச்சலைக் கொடுக்கிறது. அந்தக் குடைச்சலை எப்படி ஹீரோ குடைந்தெடுத்து வில்லன்களை (நம்மையும்) பிழிந்தெடுத்தார் என்பதே கதை

ஆதி தான் சூப்பர் ஹீரோ என்ற விசயத்தை இயக்குநர் அவரிடம் சொல்லவே இல்லை போல. சொல்லியிருந்தால் ஒரு சூப்பர்ஹீரோவிற்கான பாய்ச்சலை ஆதி நிகழ்த்தியிருப்பார். அவரின் நண்பனாக வருபவர் கொங்குத்தமிழில் ரசிக்க வைக்கிறார். ஹீரோயின் வரும் காட்சிகள் எல்லாம் ….. (எதுக்கு) முனிஷ்காந்த்& காளிவெங்கட் கூட்டணி ஓரளவு காமெடி செய்ய முயற்சித்துள்ளது. வினய் போர்ஷனை நான்குநாட்களில் எடுத்திருப்பார்கள் போல. அவரும் சளைக்காமல் ஒரே மாதிரியான வில்லன் வேடத்தைச் செய்துள்ளார்

படத்தின் ஆறுதல்களில் ஒன்று இசை என்றும் சொல்லலாம்..இல்லை என்றும் சொல்லலாம். ஒளிப்பதிவில் பொள்ளாச்சி நிலப்பரப்பு கண்களில் பதிகிறது

துவங்கி பத்து நிமிடத்திற்குள் படம் நமக்குள் நுழைந்து விட வேண்டும். வீரன் அதிலிருந்து விலகிவிடுகிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஆசை மட்டும் ஒருவரை மாஸ் ஹீரோ ஆக்கிவிடாது. அதற்கான விசயம் திரைக்கதையில் இருக்க வேண்டும். சாமி என்ற பாதையிலும் பயணித்து சயின்ஸ் என்ற பாதையிலும் பயணித்து தெளிவற்ற இலக்கில் பயணிப்பதால் வீரனிடம் போதிய வீரியமில்லை

இருந்தும் ஊர் ஒன்றுபட்டு நின்றால் ஒரு தீய காரியத்தை தடுத்து நிறுத்த முடியும் என்று படத்தை முடித்திருந்த விதம் சிறப்பு…அது மட்டும் தான் சிறப்பு!
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Veeran