சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்த ‘சிவக்குமாரின் சபதம்’ மற்றும் ‘அன்பறிவு’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்த இந்தப் படங்கள் மூலம் இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள சத்யஜோதி-ஹிப்ஹாப் தழிழா இணைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக ‘வீரன்’ அமைந்துள்ளது. இதில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நிறைவடையும் தருவாயில் படத்தின் இசை, டீசர், ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்.
#Veeran #வீரன்