Tamil Movie Ads News and Videos Portal

வட்டார வழக்கு- விமர்சனம்

புகையும் பகையே படத்தின் ஒன்லைன்

1987 காலகட்டத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடக்கும் கதையாக இக்கதையை திரைக்கதையாக்கியுள்ளார் இயக்குநர் கண்ணுசாமி ராமச்சந்திரன். இரு குடும்பங்களுக்கான பகையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலரை ஹீரோ கொன்றொழிக்கிறார். இதனால் அக்குடும்பம் ஹீரோவை பழி தீர்க்க காத்திருக்கிறது. அதன்பின் நடக்கும் எமோஷ்னல் சம்பவங்களே படத்தின் கதை

டூலெட் சந்தோஷ் மிகச்சிறப்பாக நடித்து தானொரு காத்திரமான நடிகன் என்பதை நிரூபணம் செய்துள்ளார். செங்குருதியின் அதிர்வை தனது உணர்வுகளின் வழியே கொண்டு வந்து அசத்தியுள்ளார். ரவீனா ரவிக்கு இந்தப்படம் சரியான அடையாளம். மண்ணின் மைந்தியாக அவர் காட்டியுள்ள பெர்பாமன்ஸ் அசத்தல் ரகம்..ஏனைய நடிகர்களில் பெரும்பாலானோர் கதை நடக்கும் ஊரில் இருப்பவர்களே நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பில் உள்ள எதார்த்தம் படத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக்கியிருக்கிறது.

ராகதேவன் இளையராஜாவின் பிண்ணனி இசை மண்மனத்திற்கு வலுகூட்டியுள்ளது. மேலும் இந்தப்படம் நடக்கும் காலகட்டத்தில் வெளியான அவரது பாடல்கள் ஆங்காங்கே ஒலிப்பது அதிமதுரச்சுவை. கண்களை விரிக்க வைத்து அந்த கிராமத்திற்கே இழுத்துச் செல்கிறது படத்தின் ஒளிப்பதிபு

சிறிய கதையை மண்மனம் மாறாமல் படமாக்கியுள்ளனர். திரைக்கதையில் நல்ல நேர்த்தி கைவந்துள்ளது. ஒரு உணர்வுப்பூர்வமான சினிமா வேண்டும் என்பவர்கள் அவசியம் வட்டார வழக்கை தேர்ந்தெடுக்கலாம்.
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்