வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் ‘வணக்கம் தமிழா’ சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் படம் புரொடக்ஷன் நம்பர்-1. இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை ‘ஜீவி’ பட புகழ் பாபுதமிழ் எழுதுகிறார்.
அஜய் வாண்டையார், கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக் மற்றும் VJ பப்பு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தொகுப்பை ‘பியார் பிரேமா காதல்’ புகழ் மணிகுமரன் சங்கரா மேற்கொள்கிறார். ஒளிப்பதிவு இனியன் ஜே. ஹாரிஸ். இத்திரைப்படம் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாக்கப்படவுள்ளது. மார்ச் மாதத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.