கர்ணன் படத்தில் இடம்பெற்ற மிகவும் புகழடைந்த பாடல் வரிகளை டைட்டிலாக்கி படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது படக்குழு. எதிர்பார்ப்பிற்கு வலு சேர்த்துள்ளதா படம்?
இருண்டு திருடர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள டாக்ஸி ஓட்டும் ஒரு பெண், ஒரு போலீஸ் திருடன், வட்டிக்கு விட்டு உடல் உறுப்புகளை கேட்டு மிரட்டும் ஒரு ஆசாமி, லவ் பண்ணுவது போல் நடிக்கும் ஒரு பெண் உள்பட இன்னும் சில கேரக்டர்களின் பிரச்சனைகளை வைத்துப் பின்னப்பட்ட கதையே இப்படத்தின் கதை
ஹைப்பர் லிங் காப்செட் என்றாலே இவர் தான் முதன்மைக் கதாப்பாத்திரம் என்று சொல்ல முடியாதளவில் ஆளுக்கொரு கதை விரியும். அந்தந்த கதாப்பாத்திரங்களின் பின் கதைக்கேற்றபடி கேரக்டர்களின் வலு குறையும் கூடும். அதனால் இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் தலைமைக் கதாப்பாத்திரம் என்ற கேட்டகிரிக்குள் வந்துவிடுகிறார்கள். தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி உள்பட படத்தில் நடித்துள்ள அனைவரும் ஓரளவு ஸ்கோர் செய்கிறார்கள். விநாயக் துரை கேரக்டர்களுக்கான ரைட்டிங்கில் நல்ல கவனம் எடுத்து அவர்களை சரியான இடங்களில் மோதவிட்டு பார்வையாளர்களை அட போட வைக்கும் படி திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார். நல்ல முயற்சி
மேம்பட்ட எழுத்தைக் கைக்கொண்ட இயக்குநர் நடிகர்களிடம் இன்னமும் முதிர்ச்சியான நடிப்பை வாங்கியிருக்கலாம்.
ஒரு தரமான படத்திற்கான பின்னணி இசையும் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு அமைந்துள்ளது. தமிழில் வெற்றிப்படங்கள் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்ட சூழலில் குறைந்தபட்ச நம்பிக்கையைத் தந்துள்ளது வல்லவன் வகுத்ததடா. மனம் திறந்து வரவேற்போம்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்