சி.ஜே.பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலியோர் சிலர்’. இப்படத்தை ‘மெரினா புரட்சி’ நாயகன் நவீன், கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் கௌரி அனில்குமார், சுந்தர வடிவேலு, பிரசாத், பிரசாந்த் சீனிவாசன், விஜயலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடுத்தர இளைஞனுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் நவீன். போலீசிடம் பணத்தை பறிகொடுத்து, அதை அவர்களிடம் இருந்து மீட்க போராடும் இளைஞர் கதாபாத்திரத்தில் நவீன் நடித்திருக்கிறார். படத்தின் காட்சிகள் நடுத்தர இளைஞர்களின் வாழ்வில் ,அதிகார துஷ்பரயோகம் செய்யும் ஆளுமை கொண்ட போலீஸ் அதிகாரிகளின் செயல்கள் ஏதாவது ஒன்றை ஞாபகப்படுத்தும் என்கிறார் நவீன்.
இப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, இதுவரை 7 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டிரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
பரத் தனசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரதீப் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பு – அஜு வில்பர்
பாடலாசிரியர் – ஃபடின், ஜெனிபர் ராஜசேகர்
பாடகர்கள் – பரத் தனசேகர், நிவேதிதா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன்