வேலையில்லாத இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுத்தும் வலிமை வாய்ந்த வில்லனை ஹீரோ வதம் செய்வதே வலிமையின் கதை. இதற்கிடையில் அம்மா செண்டிமெண்ட், தம்பி செண்டிமெண்ட் போன்றவையும் உண்டு
நாயகன் அஜித் ஒரு டல் மூடில் தெரிந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். அம்மா தம்பி எமோஷ்னல் காட்சிகளிலும் அவர் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அவரின் பைக் ரேஸ் காட்சிகள் எல்லாம் செம்ம மாஸ். ஹுமா குரேஷிக்கு ஒரு காட்சியில் கொடுக்கப்பட்டுள்ள மாஸ் என்ட்ரி அதகளம். படத்தில் கார்த்திகேயாவின் வில்லனிஷம் சில இடங்களில் மட்டுமே எடுபடுகிறது
தரம்+ மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருப்பது நல்ல விஷுவல் அனுபவத்தை தருகிறது..ஆக்ஷனையும் செண்டிமெண்ட் காட்சிகளையும் கலந்த மிக்ஸிங்கில் தான் இயக்குநர் சற்று கோட்டை விட்டுள்ளார். எந்தப்பக்கம் தூக்கல் எந்தப்பக்கம் சிக்கல் என்பதில் இயக்குநரின் தடுமாற்றம் தெரிகிறது
படத்தின் அதி முக்கியமான ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் தான். மாஸ் செய்திருக்கிறார். நிறைய இடங்களில் அவரது கடின உழைப்பு தெரிகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும் தனிப்பதிவு. யுவனின் பாடல் இசை அளவிற்கு ஜிப்ரானின் பின்னணி இசை அமையவில்லை
படம் நெடுந்தொடர் போல இழுப்பது ஒரு குறை. நீளத்தை குறைத்து திரைக்கதையில் ஆழத்தைச் சேர்த்திருந்தால் இன்னும் வலிமையாக இருந்திருக்கும்..ஆயினும் ஆக்ஷன் பிரியர்களுக்கான ஒரு நல்ல பேக்கேஜ் இந்த வலிமை
-மு.ஜெகன் கவிராஜ்