“நம்ம வாழ்க்கை எதை நோக்கிப் போய்க்கிட்டு இருக்குன்னே தெரியலியே” னு வடிவேலு ஒருபடத்தில் சொல்வார். இன்று உலகமே அந்த டயலாக்கைச் சொல்லும் நிலையில் தான் இருக்கிறது காரணம் கொரோனா! மக்கள் குவாரைண்டன் என்று வீட்டில் அடைப்பட்டு கிடக்கும் இன்றைய நாட்களில் மக்களின் இதயம் மக்கள் பயன்படுத்தும் இணையம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது நகைச்சுவைப் புயல் வடிவேலு தான். அவரின் காணொளிகள் தான் மக்களை ஆசுவாசமாக வைத்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிங்கமுத்துவின் சமீபத்திய பேட்டி ஒன்றினால் வடிவேலு தன் மனம் உடைந்திருப்பதாக அவரே குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிங்குமுத்துவோ வடிவேலுவுடன் நடிக்க த் தயார் என்றும் வடிவேலுவை தரக்குறைவாகப் பேசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்ப நம்ம வடிவேலுக்கு சொல்வது என்னவென்றால் “இங்க பாருங்கப்பு ஒரிஜினாலிட்டி காமெடி இல்லாமல் நம்ம மக்கள் வாடி வதங்கி கிடக்கிறாங்க. உங்க பஞ்சாயத்து எல்லாத்தையும் ஓரங்கட்டி வச்சிட்டு தயவுசெய்து நடிக்க வாங்க. உங்களால தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமான்னு கேட்டா தெரியாது. பட் மக்களுக்கு பெரிய மன நஷ்டம் பாஸ்”