Tamil Movie Ads News and Videos Portal

வதந்தி வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியீடு!

இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் பிரைம் வீடியோ, இன்று அமேசான் ஒரிஜினல் தொடரான வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி திரைப்படத்தின் உலகளாவிய முதல் காட்சி வெளியீட்டை அறிவித்தது. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட சுழல் –தி வோர்டெக்ஸ் (Suzhal –The Vortex,) ஐத் தொடர்ந்து இந்த அதிர வைக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லரை, புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) இருவரும் இணைந்து வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் (Andrew Louis) ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு பகுதிகளைக் கொண்ட இந்த த்ரில்லர் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பிரைம் உறுப்பினர்களுக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் கிடைக்கும்.

கிசுகிசுக்கள் என்று பொருள்படும் வதந்தி என்ற தலைப்புக்கு இணங்க, இதன் அறிமுக நடிகையாக சஞ்சனா (Sanjana) ஏற்றுள்ள இளம் மற்றும் அழகு ததும்பும் வெலோனி என்ற கதாபாத்திரத்தின் வதந்திகளால் நிறைந்த ஒரு புதிரான உலகிற்கு இந்தக் கதைக்களம் உங்களை அழைத்துச் செல்கிறது. சற்று மனக்கலக்கத்துடன் ஆனால் மன உறுதியோடு கூடிய காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா (S.J. Suryah), பொய்களால் ஆன ஒரு வலையில் தான் சிக்குண்டுள்ளதை அறிகிறார், ஆனாலும் உண்மையைக் கண்டறிவதில் தன் விடா முயற்சியை தொடர்கிறார். ஒரு செல்வச் செழிப்பான அடுக்குகளால் ஆன ஒரு சிறிய நகரம் வெலோனியின் கதையை சிக்கலானதாக ஆக்கும் அதே சமயம் அதை ஒரு புதிரான விந்தைகள் நிறைந்ததாகவும் மாறசெய்கிறது. இந்த திரைப்படத்தில் லைலா(Laila) , எம். நாசர்,(M.Nasser), விவேக் பிரசன்னா (Vivek Prasanna), குமரன் (Kumaran), மற்றும் ஸ்மிருதி வெங்கட் (Smruthi Venkat) போன்ற பிரபலமான நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.