Tamil Movie Ads News and Videos Portal

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தேங்க்ஸ் மீட்!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதன் தேங்க்ஸ் மீட் நடந்தது.

இந்நிகழ்வினில் நடிகர் சந்தானம் பேசியதாவது,

“தயாரிப்பாளர் விஸ்வா சாரில் இருந்து டீ குடிக்கும் பையன் வரை எல்லோருக்கும் நன்றி. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் போலவே அனைவரது கதாபாத்திரமும் மக்களுக்குப் பிடித்திருந்ததுதான் இந்தப் படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். நாத்திகரோ ஆன்மீகவாதியோ நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த கண்ணோட்டத்தில் படம் பார்க்கலாம். அப்படிதான் இது அமைந்திருக்கிறது. பொதுவான ஒரு முடிவும்தான் இயக்குநர் கொடுத்திருக்கிறார். நான் ஆன்மீகவாதிதான். சோஷியல் காமெடி செய்வது கடினம். அதை இயக்குநர் அழகாக செய்திருக்கிறார். மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அதை பார்த்து தான் எனக்கு பல பட வாய்ப்புகளும் வந்தது. சிம்புவும் என்னை கூப்பிட்டார். இந்த இயல்பை எனக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். என் படங்களுக்கு வந்தால் நீங்கள் சந்தோஷமாகப் போகலாம்” என்றார்.