Tamil Movie Ads News and Videos Portal

வாத்தி வெற்றிபெற என்ன காரணம்?

படம் என்ற பெயரில் பாடமெடுத்தால் யாருக்கும் பிடிக்காது. ஆனால் பாடத்தை கூட கமர்சியல் கலந்து படமாக எடுத்தால் அது எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக இப்போவுள்ள 2k ஜெனரேசனுக்கு. இந்த நிதர்சனத்திற்கு நச்சென வலு சேர்த்துள்ளது சமீபத்தில் வெளியான வாத்தி. வாத்தி முழு வீச்சில் தேர்ச்சியாகி வசூலை வாரிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஒருபடம் வெற்றியடைவதற்கு தரம் முக்கியம். தரம் சரியாக இருப்பின் அப்படம் மக்கள் மனதில் தடமாக பதியும். வாத்தி படம் நெகட்டிவ் விமர்சனங்களைத் தாண்டி இன்று வசூல்மழை பொழிவதற்கு முக்கியக்காரணம் படம் பேசியிருக்கும் கல்வி அரசியல். கல்வி வியாபாரமானால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என நெத்திப்பொட்டில் அடித்தாற் போல வாத்தி படத்தின் கன்டென்ட் அமைந்ததால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

தனுஷின் அடுத்தடுத்த படங்களுக்கு வாத்தி கொடுத்திருப்பது செம்ம எனர்ஜி டானிக்.

விழாவில் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லி நெகிழ்ந்தார்கள்