படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வானம் கொட்டட்டும்”. ‘படைவீரன்’ படம் விமர்சன ரீதியாக வரவேற்ப்பைப் பெற்ற போதும் வணிகரீதியாக வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் தனது உதவி இயக்குநரான தனாவிற்காக அவரின் அடுத்த
படத்தை இயக்குநர் மணிரத்னமே தனது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் குறித்து பேசிய விக்ரம் பிரபு, “வானம் கொட்டட்டும் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். அதில் மக்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்லப்பட்டுள்ளது. வானம் கொட்டட்டும் எல்லா தரப்பு மக்களையும் வசீகரிக்கும்” என்றார்.