வாயுள்ளவர்கள் வாழ்வார்கள் என்பதையும், நேர்மையிருந்தும் போலியான வாதம் இல்லாவிட்டால் இந்த உலகில் சர்வைவல் செய்யமுடியாது என்ற நிதர்சனத்தையும் உள்ளடக்கிய படம் வாய்தா
மு.ராமசாமி சலவைத் தொழிலாளர். அவருக்கு ஒரு விபத்து நேர்கிறது. அந்த விபத்திற்கான நிவராணம் தேடி நீதிமன்றம் செல்ல வைக்கப்படுகிறார் மு.ராமசாமி. அதற்குப் பின்னால் ஓர் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்பது தனிக்கதை. முடிவில் முடிவு சாமானியருக்கு உகந்ததாக இருந்ததா என்பதே வாய்தாவின் கதை
மு.ராமசாமியின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் ஈர்ப்பதாக உள்ளது. அவரின் நடிப்பின் அடர்த்தி படமெங்கும் விரவியுள்ளது. போலவே புகழ் மகேந்திரனும் நன்றாக நடித்துள்ளார். நாசரின் அனுபவம் காட்சியெங்கும் வியாபிக்கிறது. ஜெஸ்ஸிகா நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. நடிகர்கள் யாவரும் படத்தின் கேரக்டர்களாக மாறி நடித்திருப்பது படத்தின் பாசிட்டிவ் ஏரியா
லோகேஸ்வரனின் பின்னணி இசை வாய்தாவிற்கு வலிமை சேர்த்துள்ளது. ஒளிப்பதிவு படத்தை சின்னபடம் என்ற தோற்றத்தைத் தரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. கேமராமேன் பாராட்டுக்குரியவர்.
கமர்சியல் டூட் பிடிக்காமல் கனமான கதையை தேர்ந்தெடுத்து அதை சின்னச் சின்ன சமரசங்கள் செய்து படமாக்கியிருக்கும் இயக்குநர் மகிவர்மனுக்கு வாழ்த்துகள்
நீதிமன்றத்தை அடிநாதமாக கொண்ட கதைகள் எப்பவுமே ரசிகர்களை ஈர்க்கும் தன்மை உடையவை. அந்த வகையில் வாய்தாவும் நம்மை ஏமாற்றவில்லை
-மு.ஜெகன் கவிராஜ்