உன்னால் என்னால் மட்டுமல்ல யாராலும் யூகிக்க!!!!! ???? முடியாத ஒரு கதை?? (ஓ கதை இருக்கா?)
கிராமத்து இளைஞர்கள் மூன்று பேர். அவர்கள் மூவருக்கும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள். அதற்கான ஒரே தீர்வு பணம். அந்தப் பணத்தை நான் தர்றேன் என அவர்களிடம் சொல்கிறார் சோனியா அகர்வால். சும்மா எப்படி பணம் தருவார்? பதிலுக்கு ஒரு கொலை செய்ய வேண்டும் என மூவரிடமும் சொல்கிறார் சோனியா அகர்வால்? What next? என்பது மீதிப்படமாக விரிகிறது
இவர்களுடன் சோனியா அகர்வால் என்று சொல்லும் அளவில் தான் அவர் வரும் புட்டேஜ் படத்தில் இருக்கிறது. ஜெகா, ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ், மோனிகா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகிய புதுமுகங்கள் லீட் ரோல்ஸ் பண்ணியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நிச்சயமாக நல்ல கூத்துப்பட்டறையில் பயிற்சி பெறும் தகுதியுடையவர்களாக ஜொலிக்கிறார்கள். டெல்லிகணேஷ், ராஜேஷ், மறைந்த நெல்லை சிவா, இவர்கள் போதாதென்று போதாத காலத்திற்கு ரவிமரியாவையும் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சோதிக்கிறார்.
ரிஸ்வான் இசை ஆங்காங்கே இம்சைகள் கொடுத்தாலும் எதோ ஒரு பாடலுக்கு மட்டும் காதைக் கொடுக்கலாம். ஒளிப்பதிவு எனும் பெயரில் பல ஜிகினா வேலைகள் படத்தில் செய்திருக்கிறார்கள்
படத்தின் மேக்கிங், திரைக்கதை, & லாஜிக் லீக்ஸ் எப்படியெல்லாம் இருக்கிறது? என்று கேட்டால், குறை சொல்ற அளவுக்காவது எதாவது இருந்தால் கண்டிப்பா சொல்லிருப்போம்🙏
படத்தின் ரேட்டிங்?
சொல்ல முடியாது என்னால்!
சொல்ல முடியுமா உன்னால்?
-மு.ஜெகன் கவிராஜ்