சென்ற ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “96”. இப்படத்தின் வெற்றி இதனை கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய வைத்தது. தெலுங்கில் இப்படம் “ஜானு” என்கின்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த கதாபாத்திரங்களில் முறையே சர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இப்படத்தின் தோல்விக்குப் பின்னர் தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை ‘ப்ளாஃப் ஹீரோயின்” என்று அழைக்கத் தொடங்கினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கும் சமந்தா, “ஹீரோக்கள் மூன்று நான்கு தோல்விப்படங்கள் கொடுத்தால் கூட, ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஹீரோயின்கள் நடித்த படங்கள் தோல்வியடையும் போது, அவர்களை ப்ளாஃப் ஹீரோயின் ஆக்கிவிடுகிறார்கள். இப்படி படத்தின் தோல்விக்கு ஹீரோயின் மீது பழி போடுவது துரதிஷ்டவசமானது.” என்று தெரிவித்துள்ளார்.