500 ஆண்டுகளுக்கு முன்பான தங்கப்புதையலுக்கு தானே வாரிசு என சாண்டியாகோ மான்காடா புதையலை அள்ளி வர கிளம்புகிறார். அதேநேரம் பல பில்லியன்கள் மதிப்புள்ள அவற்றை கொள்ளையடிக்க ப்ளான் போடுகிறது சுல்லி-நேட் க்ளோயி கூட்டணி. இரு தரப்பில் யார் கைக்கு அப்புதையல் கிடைக்கிறது என்பதே அன்சார்டட்
மிகப் பெரிய சவால்கள் நிறைந்த விசயங்களை படத்தின் மையக் கதாப்பாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் தான் படத்தின் சுவாரஸ்யமே இருக்கிறது. அதை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஃப்ளீஷர் அன்சார்டட் கேமில் தனது சொந்த கற்பனைகளையும் அள்ளித்தெளித்து இருக்கிறார். படம் நெடுக அது நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது
ஹாலிவுட் தொழில்நுட்பம் பற்றி சொல்லவே தேவையில்லை. எபெக்ட்ஸ், சி.ஜி, கேமரா என எல்லாமே வேறலெவல் குவாலிட்டி. சி.ஜி துணையில்லாமல் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளும் மிரட்டல் ரகம். சிலபல ஜல்லியடிக்கும் காமெடிகளை தவிர்த்து திரைக்கதையை அமைத்திருக்கலாம்
டாம் படம் முழுவதும் தனித்தன்மையுடன் மிளிர்கிறார். சுல்லியாக நடித்துள்ள மார்க் வால்ல்பெர்க் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். சிறிய கதையாக துவங்கி அது பெரிதாக வளரும் அன் சார்டட் படத்தோடு நாம் ஒருமுறை ஜாலியாக சாட் செய்யலாம்
-மு.ஜெகன் கவிராஜ்