மனசு நின்னுட்டா உயிர் போயிட்டுன்னு அர்த்தம்..உயிர் போகுற வரைக்கும் மனசு சிந்திக்கிறதை நிறுத்தவே நிறுத்தாது. ஆக மனம் தான் வாழ்வின் பெரிய வரம். அதைத் தரமாக்கி கொண்டால் மட்டுமே இங்கு மாற்றம் புரட்சி எல்லாம் நடக்கும்..
புறத்தில் உள்ள புரட்சியை விட அகப்புரட்சி தான் முக்கியமானது என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இவரை இந்த நூலில் இருந்து தான் தொட்டேன். நிறைய பக்கங்கள் புரியவேயில்லை. ஆனால் ஏதோ கற்றுக்கொண்டது போலவும் இருக்கு..
ஒரு மனிதனை நாம் ஏன் மன்னிக்கிறோம்?
அவனால் ஏற்பட்ட காயத்தை மனதில் சேமிக்கிறோம்..பின் தொடர்ந்து சேகரிக்கிறோம்..பின் ஒருநாள் சரி மன்னித்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறோம். மனதில் சேமித்தல் என்பதில் இருக்கிறது பிரச்சினை. காயத்தை மனதில் ஏற்றாத நிலைபெற்றவன் அன்புகொண்ட மனதின் ஆகிறான். இப்படியான நிறைய தத்துவங்கள் நிறைந்த பொக்கிச கருத்துக்கள் நூலெங்கும் இருக்கிறது ..
நம்பிக்கை பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுப் புரிதலை பெரிய விவாதத்திற்கு உள்ளாக்குகிறார்.
துறவுநிலைக்கான புத்தகமா? என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும் மனம் என்பது எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதை உணர வைத்த நூல்