எழுதும் காட்சிகளை படமாக்குவது எப்படி சவாலோ…அதே சவால் பார்த்த காட்சிகளை அப்படியே எழுத்தாக்குவதும். இவை இரண்டும் சாத்தியப்பட்ட ஒரு கலைஞன் செழியன் சார். இந்த நூலும் நூலில் அவர் சுட்டியுள்ள படங்களும் எப்போதோ வாசித்தும், பார்த்துமிருக்க வேண்டும். எல்லாத்துக்கும் நேரம் வரணுமில்லியா?
இந்த நூலில் செழியன் குறிப்பிட்டுள்ள 29 படங்களும் உணர்ச்சிக் கவிதைகள். “ரசனை மாறினால் வாழ்க்கை மாறும்” என்ற கோட்டுடன் துவங்கும் இந்த உலக சினிமா நூல் உதவி இயக்குநர்களுக்கு அட்சய பாத்திரம்.
Children of heaven படம் பார்க்கும் போது நமக்கு என்ன உணர்வெழுச்சி எழுமோ.. அதை செழியனின் எழுத்தில் வாசிக்கும் போதும் உணர முடிகிறது. Life is beautiful படம் நான் பார்க்கவில்லை. இந்தப்படத்தை செழியன் மொழி வழியாய் போட்டுக்காட்டிய பிறகு படம் பார்க்கும் ஆர்வமும் மன நடுக்கமும் ஒருங்கே வந்து தொலைக்கிறது
கண் தெரியாத ஒருத்தியை நாடோடி ஒருவன் காதலிக்கிறான். அவளுக்கு உதவியும் செய்கிறான். அவள் அவனை பெரும் கோடீஸ்வரன் என நினைக்கிறாள். அவளுக்கு கண் பார்வை வருகிறது. இருப்பினும் காதல் ஜெயித்து அகத்தில் பொன் பூணுகிறது.
City lights எனும் இப்படத்தை கண்களால் பார்த்து மனதால் நுகர்ந்து பின் நினைத்துப் பார்த்தால் துள்ளாத மனமும் துள்ளும்
மேலும் செழியன் பரிந்துரைக்கும் பெரும்பாலான படங்களில் இடதுசாரி வாசம் வீசுகிறது. அவை அனைத்தும் மானுட நேசம் பேசுகிறது. கலையின் ஆழமும் அறமும் மனித நேசமாகத்தானே இருக்க வேண்டும்.
இந்த நூலின் அடுத்த பாகத்தை வாசிக்க ஆவலாக உள்ளேன். இயக்குநர் பிரசாத் கொடுத்திருக்கிறார். சில படங்களைப் பார்த்துவிட்டு வாசிக்கணும்❤️