தமிழ் சினிமாவில் ஹீரோயின்களும் பல ஆண்டுகள் நிலைத்துநிற்கும் அதிசயங்கள் தற்போது நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இது ஆச்சரியமான வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். நயன்தாரா, த்ரிஷா, போன்ற நாயகிகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று நாயகிகளாக நடித்து வருகிறார்கள். 2002ம் ஆண்டு வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா
தற்போது 17 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 18ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். மேலும் சென்ற 2018ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான “96” படத்தின் மூலம் இதுவரை 11 விருதுகளை வென்றிருப்பதோடு, சென்ற ஆண்டு மலையாளத்தில் த்ரிஷா நடித்த “ஹே ஜூட்” படமும் இதுவரை 3 விருதுகளை வென்றிருக்கிறது. இது மலையாளத்தில் த்ரிஷா நடித்த முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது விருதுகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றியிருக்கும் த்ரிஷா அதன் கீழ், “எனது ஆசிர்வாதங்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.