‘96’ திரைப்படத்தின் வெற்றி மீண்டும் த்ரிஷாவை லைம் லைட்டில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கிடைத்த இந்த வெற்றியால் அவர் மீண்டும் முக்கியமான இயக்குநர்களின் சாய்ஸில் வரத் தொடங்கியிருக்கிறார். ‘த்ரிஷ்ஷியம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர்
ஜூத்து ஜோசப் இயக்கும் அடுத்த படமான “ராம்” படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். த்ரிஷா. இதில் அவருக்கு டாக்டர் வேடம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ‘த்ரிஷ்ஷியம், பாபநாசம், தம்பி வரிசையில் இப்படத்தையும் த்ரில்லர் வகைத் திரைப்படமாக உருவாக்கவிருக்கிறார் ஜோசப். சென்ற ஆண்டுதான் முதன் முறையாக மலையாளத் திரைப்படத்தில் த்ரிஷா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.