Tamil Movie Ads News and Videos Portal

ட்ரிகர்- விமர்சனம்

100 படத்தில் கவனிக்க வைத்த இயக்குநர் சாம் ஆண்டன் ட்ரிகர் படத்தில் 100 மார்க் எடுத்தாரா?

நேர்மையான காவல் அதிகாரி அதர்வா தன்னிச்சையான ஒரு முடிவால், வேலையின் நிமித்தம் சிக்கலுக்குள்ளாகிறார். ஆனாலும் காவல்துறை அவர் உதவியை நாட, ஒரு குழந்தை காணாமல் போன கேஸை கவனிக்கிறார். அதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கிறது. அடுத்தடுத்து என்ன என்பதே படத்தின் கதை

காக்கிச்சட்டை போடாமலும் போலீஸ் வேடத்திற்கு பக்காவாக பொருந்துகிறார் அதர்வா. இன்னும் அவருக்கு பெருந்தீனி கிடைக்கும் கேரக்டர்களை இயக்குநர்கள் உருவாக்கினால் அதர்வா அசத்துவார். தான்யா ரவிச்சந்திரன் அழகால் ஈர்க்கிறார். நடிப்பாலும் கவர்கிறார். வில்லன் டீமும் நல்ல தேர்வு

கேமராமேன் தன்னால் முடிந்த எல்லா ப்ளஸ்களையும் படத்திற்குள் புகுத்தியிருக்கிறார். இசையின் பங்கும் ட்ரிகரின் குறிக்கோளுக்கு வலு சேர்த்துள்ளது.

அழகாக ஆரம்பித்த கதையில் ஆழமான திரைக்கதை பயணம் இருந்திருந்தால் ட்ரிகர் இன்னும் பாய்ந்திருக்கும்.

3/5
-மு.ஜெகன் கவிராஜ்

 

#Trigger #ட்ரிகர்