Tamil Movie Ads News and Videos Portal

விஜயகாந்த் போல் ஆக்சனில் ஜொலிக்கிறார் அதர்வா-சின்னி ஜெயந்த்!

PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில் நடிகர் சின்னி ஜெயந்த் கூறியதாவது..,

“இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்துள்ளார். ஒரு ஆக்‌ஷன் நிறைந்த ஆங்கில படத்தில் நடித்த அனுபவம் போல் இந்த படம் இருந்தது. அதர்வா உடன் எனக்கு இது முதல் படம். ஆக்சனில் தமிழில் சிலர் மட்டுமே ஜொலிப்பார்கள் விஜயகாந்த் போல் அதர்வாவின் ஆக்‌ஷன் நடிப்பில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும்.”

#Trigger #ட்ரிகர்