Tamil Movie Ads News and Videos Portal

திரைப்பட பிரச்சனைகளுக்கு தீர்வு- டி.ஆர் தகவல்

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவியேற்றார். இதுதொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை டி.ராஜேந்தர், டி.மன்னன் சந்தித்தனர்.

சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியபோது, “சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. மேலும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஶ்ரீனிவாசலு, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.மன்னன், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.காளையப்பன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பாபுராவ் ஆகியோருக்கும், வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை ஆதரித்து அரவனைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று நாங்கள் அனைவரும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவலகத்தில் முறையாக பதிவியேற்றோம்.

1979ம் ஆண்டு ஒரு தலை ராகம் முலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இன்றுடன் 40 ஆண்டு கால அனுவபத்தை பெற்றுள்ளேன். இந்த அனுபவத்தை முழுமையாக சினிமாவிற்கு தேவை என்று என் நண்பர் டி.மன்னன் மற்றும் என் எண்ணற்ற நண்பர்கள் கூறியதால் நான் தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன்.

மத்திய அரசு விதிக்கும் GST வரியை மற்ற எந்த வரியையும் (கேளிக்கை வரி) மற்ற மாநில அரசுகள் விதிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் 8% கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பல தரப்பட்ட சினிமா சங்கத்தினரிடம் கலந்து ஆலோசித்து ஒரு சிறப்பான முடிவை எடுத்து அரசிடம் எங்களது கோரிக்கையை முன் வைப்போம்.

டிக்கேட் கட்டணம் முடிந்தவரை குறைக்கப்பட்டு சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்படும்.

இப்படி தமிழ் சனிமா தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடைக்க நாங்கள் முற்பட்டுள்ளோம்.“ என்றார்.