”டோங்கா” நான் நடித்த இரு படங்களின் கலவை – கார்த்தி
நடிகர் கார்த்தி முதன்முறையாக தன் அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் “டோங்கா”. இப்படத்தை ‘த்ரிஷ்சியம்’ ‘பாபநாசம்’ படங்களை இயக்கிய ஜுத்து ஜோசப் இயக்கி இருக்கிறார். சத்யராஜ், நிகிதா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் வரும் டிசம்பர் 20ல் ரீலீஷ் ஆகிறது. அதே தேதியில் தெலுங்கில் “டோங்கா” என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “இப்படம் எனது முந்தைய படங்களான ‘ஓபிரு’ (தோழா), ‘நா பேரு சிவா’ (நான் மகான் அல்ல) ஆகிய படங்களின் கலவையாகும். குடும்பம் சார்ந்த நெகிழ்ச்சியான காட்சிகளும், பதைபதைக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளும் சரியான கலவையில் இருக்கும்” என்று பேசினார்.