‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் வைத்து நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர்
கேஎஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பல வித கெட்டப்புகளில் விக்ரம் இப்படத்தில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இப்படத்தின் தலைப்பு “அமர்” ஆக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் தலைப்பு “அமர்” இல்லை என்று படக்குழு மறுத்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் தலைப்பு “கோப்ரா” என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் வரும் புத்தாண்டு தினத்தில் முறையாக அறிவிக்கவிருக்கின்றனர்.