Tamil Movie Ads News and Videos Portal

‘திடல்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை :ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார்!

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் ‘திடல் ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார்.இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.இவர் இயக்குநர் முகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர். மேலும் பல படங்களில் பணியாற்றியவர். ஏராளமான குறும்படங்கள் எடுத்தவர். ஒரு ஷார்ட் பிலிம் மேக்கராக பரவலாக அறியப்பட்ட இவர், தனது குறும்படங்களுக்காக 7 விருதுகளை பெற்றிருப்பவர்.

இந்தத் ‘திடல்’ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை .முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கம் படுத்துகிறார்கள். அவர்கள பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட. அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான ஒரு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் எண்ணம் கிரவுண்ட் கிடைத்ததா இல்லையா என்பது தான் முடிவு.
இப்படத்தில் பிரபு, அன்பு,சாகுல், யோகேஷ் ,கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். மற்றும் முக்கியமான திருப்புமுனைக் கதாபாத்திரத்தில் வினோதினி நடித்திருக்கிறார். முக்கிய பாத்திரத்திரங்களில் ராட்சசன் eng கிறிஸ்டோபர், சரண்ய ரவிசந்திரன், நடித்துள்ளார்கள் .இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு , இசை ஸ்ரீசாய் தேவ். வி. இவர் தெலுங்கில் மூன்று படங்கள் கன்னடம் 2 தமிழ் 4 படங்களுக்கு இசையமைத்து உள்ளவர். எடிட்டிங் ரோஜர் .கலை – சிவா. நடனம்-ஜாய் மதி, ஸ்டண்ட்- ஓம் பிரகாஷ்.

இப்படத்தின் கதையை எழுதி முக்கிய பாத்திரத்தில் நடித்தது தனது கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் P. பிரபாகரன். ‘திடல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராட்சசன் ராம்குமார்j படத்தை பற்றி விசாரித்துப் பாராட்டியிருக்கிறார் .இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.