HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் திரை பிரபலங்கள் முன்னிலையில் அரங்கேறியது.
இவ்விழாவினில் நடிகை குஷ்பூ கூறியதாவது..,
“ பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். பிருந்தா மாஸ்டர் தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குனரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
#Thugs #தக்ஸ்