காக்கா பருந்தாகாது, கானல் விருந்தாகாது, அப்புறம் எப்படி விமல் ஆக்ஷன் ஹீரோ ஆகலாம்? என்ற கேள்வி படத்தோட லுக்-ஐ பார்த்ததும் எழுந்துச்சு..படம் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுச்சு?
கேடுகெட்ட கும்பலை வேட்டு வைத்து ஒளிக்கும் ஒரு மாஸ் ஹீரோ கதை. மாஸ் இருந்துச்சான்னா…விமல் எந்தளவுக்கு மாஸ் காட்டுனா நாம ஏத்துப்போமோ அந்தளவிற்கு இருந்துச்சு.
ஆக்ஷன் ஹீரோவிற்காக விமல் எடுத்துள்ள முயற்சி ஓகே..but பயிற்சி இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். கிக்கர் ஷாட் எல்லாம் அவருக்கு மக்கர் பண்ணுது ப்ரோ. நாயகி உள்பட யாருக்குமே பெரிதாக ஸ்கோர் பண்ண வாய்ப்பில்லை. சுரேஷ்மேனென் கூட ஓவர்டோஸ் நடிப்பால் நம்மை படுத்துகிறார். “அவன் வட்டம் போடல..திட்டம் போடுறான்” போன்ற பாடாவதி டயலாக்ஸ் பேசும் உதிரி வில்லன்கள் எல்லாமே படத்திற்குத் தான் எனிமிஸ். வழமை போல காமெடி எனும் பெயரில் சதிஷ் அடிப்பது எல்லாம் சாவடி
பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே இரண்டாம் நூற்றாண்டுக்கு சம்பந்தமில்லாதது. ஒருசில இடங்களில் மட்டும் ஓகே. ஒளிப்பதிவாளர் விமலுக்கு மாஸ் ஷாட் வைத்த இடங்கள் தவிர ஏனைய இடங்களில் பாஸ் ஆகிவிட்டார்
ஒரு போலீஸ் அதிகாரியின் மகள் ஆடி காரில் பிணமாக கிடக்கிறார். ஹீரோ ஒரு பக்கம் யூட்யூப் சேனல் நடத்துகிறார். போலீஸ் அதிகாரியின் மகளின் கொலைக்குப்
பின்னால் நடக்கும் க்ரைமுக்கும் ஹீரோவிற்கும் என்ன லிங் ஆகுது என்பதாக அமைக்கப்பட்ட திரைக்கதை நிச்சயமாக நன்றாக உள்ளது. ஆனால் காட்சியமைப்புகளிலும் வசனங்களிலும் படத்தில் பழைய வாடை அதிகம்
ஆர்வத்தில் துடிக்கும் கரங்களை கொஞ்சம் அடக்கி டெக்னிக்கலாக இன்னும் சிறப்பாக சீன் பிடித்திருந்தால், இந்தத் துடிக்கும் கரங்களுக்கு நம் கரங்களால் கை தட்டியிருக்கலாம்
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்