சத்யஜோதி ப்லிம்ஸ் இந்த டைட்டிலுக்கு ராயல்டி கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் படக்குழு களம் இறங்கியுள்ளது. ஏன்னா அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் தூக்குதுரை. ஒருவேளை சத்யஜோதி ப்லிம்ஸ் இப்படத்தைப் பார்த்தால் ராயல்டி கேட்காமல், கேஸ் போடும் வாய்ப்புள்ளது.
தூக்குதுரையின் கதை? இனியா பணக்காரர். யோகிபாபு ஏழை. ஒகே! அப்புறம்?
படத்தை நிமிரப் பார்க்காமல் குப்புறப்படுத்தபடியே மீதிக்கதையைச் சொல்லிடலாம் பாஸ். இனியாவின் அப்பா யோகிபாபுவை அடித்து எரித்து ஒரு கிணற்றில் போட, அந்தக் கிணற்றில் ஒரு கீரிடம் இருக்க, யோகிபாபு பேயாக அந்தக் கிணற்றில் உள்ள கிரீடத்தை எடுக்க வருபவர்களை அட்டாக் பண்ண, கடைசியில் தூக்குதுரை எப்படி நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் சென்றார் என்பதே மீதிக்கதை
யோகிபாபு சில இடங்களில் அல்ல..சில படங்களில் நம்மை சோதிப்பதுண்டு. இந்தப்படம் அதில் ஒன்று. இனியா, “இந்தக் கதைக்கு இதுபோதும்” என்றளவிலே நடித்துள்ளார். பால சரவணன்லாம் வாட்ஸப் மெசேஜ்களை காமெடியென ஒப்பிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் மொட்டையை வைத்து மட்டுமே காமெடி காட்சிகளை மொட்டையடிக்கிறார். போங்கங்க!
ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் பற்றி இவ்விருவரும் அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும் போது விரிவாக எழுதுவோம்
கதை என்ற ஒன்றுக்கும் திரைக்கதை என்ற ஒன்றுக்கும், நல்ல மேக்கிங் என்ற ஒன்றுக்கும் தாம் எடுக்கும் சினிமாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைத்துவிட்டார்கள் போல.
தூக்குதுரை.. தொங்க விட்டுட்டியப்பா
2/5
-மு.ஜெகன் கவிராஜ்