உலகமே கொரோனா வைரஸின் தாக்கத்தால் செயலிழந்து முடங்கிப் போயிருக்கும் இந்த அசாதாரணமான சூழலில் கூட நடிகை கஸ்தூரிக்கும் நடிகர் அஜீத் ரசிகர்களுக்குமான சண்டை ஓய்ந்தபாடில்லை. சில நாட்களுக்கு முன்பு வரை அமைதியாக இருந்த இருவர் தரப்பும் இரண்டு நாட்களாக மீண்டும் இணையதளங்களில் வார்த்தை போரில் இறங்கி இருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக நடிகை கஸ்தூரி நேற்று, கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில், “ஊரையே மூடிட்டாங்க. இந்த லூஸுங்க வாயை மூடாது போல.. என்னவேணும்னாலும் சொல்லிட்டு போங்கடா. என் அறக்கட்டளையை நம்பி இருக்கும் 60 குடும்பங்களைக் காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கிறேன். No Time For Nonsense. Stay Home. Be Safe.” என்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.