Tamil Movie Ads News and Videos Portal

”இது மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி” – கமல்ஹாசன்

நடிகரும் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் மீனவர்களுக்கு ஆளும் அரசு அநீதி இழைத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஏற்கனவே ஊரடங்கை முன்னிட்டு அவர்கள் 26 தினங்களுக்கும் மேலாக மீன் பிடித் தொழிலுக்கு செல்லாமல் இருக்கிறார்கள். ஊரடங்கு முடியவிருக்கும் தறுவாயில் மீண்டும் மீன்பிடி தடை காலத்தைக் காரணம் காட்டி அவர்கள் கடலுக்கு செல்ல தடையை நீட்டிப்பது இது மீன்களின் இனவிருத்தி காலம் என்பதால் தான் என்று அரசு காரணம் கூறுகிறது.

ஆனால் நம் கடற்பரப்பிற்குள் அந்நிய நாட்டுக் கப்பல்கள் வந்து மீன் பிடித்துக் கொண்டு இருக்கிறார்களே..? அது மட்டும் மீன்களின் இனவிருத்தியை பாதிக்காதா..? இது நம் நாட்டு மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா..?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.