‘தடையறத் தாக்க’, ‘குற்றம் 23’, ‘தடம்’ படங்களின் மூலம் நிலையான வெற்றியைக் கொடுக்கும் நடிகராக மாறி இருக்கும் அருண் விஜய் தற்போது, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி 21ல் வெளியாகவிருக்கிறது. மேலும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வரும் ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பும் முடியும் தறுவாயில் இருக்கிறது.
இவைகளைத் தவிர்த்து என்.ஜி.ஆர்.குமரவேல் இயக்க்கத்தில் “சினம்” படத்தில் காவல் துறை அதிகாரியாகவும் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படம் குறித்துப் பேசிய அருண் விஜய், “கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் இயக்குநர் குமரவேல் வித்தகராக இருக்கிறார். அவ்ரின் தொலைநோக்குப் பார்வை பல சிக்கல்களை எளிதாக தீர்த்து விடுகிறது. இப்படம் ஆக்ஷன் வகைப்படமாக உருவாகி வருகிறது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார் போல் காட்சிகளை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார். இப்படம் எனது கேரியரில் முக்கியமான திரைப்படமாக அமையும்..” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.