ஆமாம் இது ஊர் அடங்கில் (Lockdown) எடுக்கப்பட்ட குறும்படம். கதையில் இரண்டு கதாபாத்திரங்கள் இருவரும் அவர்களின் வீட்டுக்குள்ளிருந்து நடித்தார்கள். டெக்னிக்கல் டீம் பலர் இருந்திருப்பார்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழும்பும். கூட்டம் கூடாமல் இதை எப்படி எடுத்திருக்க முடியும் என்று கேள்வி எழும்பும். அதற்கு விடையும் நானே சொல்லிவிடுகிறேன். இந்தக் குறும்படம் எடுக்கும்பொழுது எந்த குழுவும் வேலை செய்யவில்லை. இந்த குறும்படத்தில் டெக்னிக்கல் வொர்க் அதாவது கேமரா, எடிட்டிங், டைரக்ஷன், கதை, திரைக்கதை, வசனம், டைட்டில், Vfx, கலரிங் மற்றும் அனைத்து வேலைகளும் ஒரே நபரால் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில குறைகளை பார்க்காமல் இந்த குறும்படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
அபிமன்யு.